​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீன தலைநகர் பெய்ஜிங்கில் அதிகரிக்கும் வெப்ப அலை.. வெயிலில் பணிபுரியும் வேலைகளை நிறுத்த அரசு உத்தரவு..!

Published : Jul 06, 2023 1:40 PM

சீன தலைநகர் பெய்ஜிங்கில் அதிகரிக்கும் வெப்ப அலை.. வெயிலில் பணிபுரியும் வேலைகளை நிறுத்த அரசு உத்தரவு..!

Jul 06, 2023 1:40 PM

சீன தலைநகர் பெய்ஜிங்கில் வெப்ப அலை அதிகரித்து வருவதால், வெயிலில் பணிபுரியும் அனைத்து வேலைகளையும் நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் தெற்கு பகுதியில் மழை, வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், வடக்குப் பகுதியில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது.

பெய்ஜிங்கில் 1961ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால், பெய்ஜிங்கில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இம்மாதம் சீன நாடு பல்வேறு இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.