மெக்சிகோவின் ஓக்ஸாக்கா மாகாணத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர்.
புதன்கிழமை காலை மெக்சிகோவில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து, மாக்டலேனா பெனாஸ்கோ என்ற இடத்தில் மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 80 ஆடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 27 பேர் உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.