இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.
இஸ்ரேல் அரசாங்கம் நீதித்துறையில் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல மாதங்களாக போராட்டங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெல் அவிவ் நகரில் ஒன்று கூடி, பிரதான நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு தீமூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர திணறிய போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்து கலவரக்காரர்களை விரட்டி அடித்தனர்.