உக்ரைன் தலைநகர் கீவ் நீதிமன்றத்துக்குள் கையெறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் அங்கு பணியில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற கையெறி குண்டு வீச்சுக்குப் பிறகு, ஒரு போலீஸ் அதிகாரி நீதிமன்றத்தை விட்டு வெளியே ஓடி, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்தார்.
முதற்கட்ட தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் மூன்று கையெறி குண்டுகளை வெடிக்கச் செய்து காவலர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தார் என தெரியவந்துள்ளது.தொடர்ந்து மோப்ப நாய்களின் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்