தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சிலிண்டரில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தைகள் பெண்கள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்து நடந்த இடத்தில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.தங்கத்தைச் சுத்திகரிக்கும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவைச் சுவாசித்ததால் உயிரிழப்பு என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.