சென்னை சிறுசேரி ஐடி பூங்காவில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்ற பேருந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
ஆலந்தூர் மடுவான்கரை மேம்பாலத்தில் இருந்து இறங்கும் போது பேருந்து அதிக வேகத்தில் சென்றதாகவும், அப்போது ஓட்டுனர் சிறிது கண் அயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மேம்பாலம் இறங்கும் இடத்தில் காந்தி மார்கெட் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் பேருந்து மோதியது.இதில் 10 பயணிகள் காயமடைந்தனர்.