அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஓவல் அறை எனப்படும் அதிபர் அலுவலகம் அருகே பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை பவுடர் கோகய்ன் என்ற போதைப் பொருள்தான் என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிபர் மாளிகையில் வேறு யார் இதனைப் பயன்படுத்தி இருக்க முடியும் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.
பார்வையாளர்கள் மொபைல் போன்கள், பைகள் முதலியவற்றை வைக்கும் வெஸ்ட் சைட் பகுதியில் ஜிப்பால் மூடிய பையில் இந்தப் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அளவில் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்