அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பை எதிர்த்து முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், டிரம்ப் அதிபராக பதவி வகித்தபோது துணை அதிபராக இருந்த மைக் பென்ஸும், குடியரசு கட்சி வேட்பாளராக அவரை எதிர்த்து போட்டியிட உள்ளார்.
இதற்கான மனுவை பென்ஸ் தாக்கல் செய்துள்ள நிலையில், அயோவா மாகாணத்தில் நாளை நடைபெறும் சிறப்பு கூட்டத்தில், பென்ஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.