ஒடிசா ரயில் விபத்தில், சிக்னல்கள் இயக்கத்தில் திட்டமிட்ட இடையூறு அல்லது சதி நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில்தான் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிபிஐ தனது விசாரணையை விபத்து நடந்த இடத்தில் தொடங்கியுள்ளது.அப்பகுதியில் உள்ள அனைத்து ரயில்வே ஊழியர்களும் ரயில்வே அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதில் விபத்துக்கு காரணமாக இருந்த தவறான சிக்னல் முக்கிய கவனம் பெறுகிறது. திட்டமிட்ட இடையூறு இல்லாமல், மெயின் லைனுக்கான பாதையை லூப் லைனுக்கு மாற்றுவது சாத்தியமில்லை என அதிகாரிகள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.