திருச்சி மாவட்டத்தில் காதலியை பார்ப்பதற்காக நள்ளிரவில் சென்ற காதலன் ஊர்மக்களிடம் சிக்கியதால், காதலி தற்கொலை செய்துக் கொண்டார். ஆமூரைச் சேர்ந்த சங்கவி என்பவர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை நள்ளிரவில் காதலியை பார்ப்பதற்காக வந்தவரை அப்பகுதியினர் பிடித்து தாக்கியதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க, தான் சங்கவியை பார்க்க வந்ததாக தகவலை அந்நபர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
காதல் பற்றி தெரியவந்ததை அடுத்து சங்கவியை அவரது குடும்பத்தினர் திட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து, சங்கவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
உடனே குடும்பத்தினர் போலீசாருக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் இறுதி சடங்கிற்கான பணிகளில் இறங்கினர். தகவலறிந்த வாத்தலை போலீசார் சங்கவி வீட்டிற்கு சென்று சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.