ஒடிசாவின் பர்கார் மாவட்டத்தில் தனியார் சிமெண்ட் ஆலை வளாகத்திற்குள் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.
சம்பர்தாரா பகுதியில் இன்று காலை சுண்ணாம்புக் கற்களுடன் துங்குரி என்ற இடத்திற்கு அந்த சரக்கு ரயில் புறப்பட்டது. சற்று நேரத்திலேயே அந்த ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின.
சிமெண்ட் ஆலை வளாகத்திலேயே தடம் புரண்ட அந்த சரக்கு ரயிலை கையாளுவது, சரக்குகளை ஏற்றி இறக்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனமே மேற்கொண்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிக பாரம் ஏற்றியதன் காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.