பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
மே 9ம் தேதி இம்ரான் கைதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளில் இம்ரான்கானுக்கு தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டால் அவர் ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று ஆசிப் கூறியுள்ளார்.
மே9 பேரணியின் போது அரசு பொதுச்சொத்துகள் பெருமளவுக்கு சேதம் செய்யப்பட்டன என்றும் ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்து என்றும் பாகிஸ்தான் அரசு இம்ரான் கான் மீது குற்றம் சாட்டியுள்ளது.