​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை சென்ட்ரலுக்கு வருகை தந்த 137 பேரில் 8 பேருக்கு காயம் - அமைச்சர் மா.சு

Published : Jun 04, 2023 4:30 PM

சென்னை சென்ட்ரலுக்கு வருகை தந்த 137 பேரில் 8 பேருக்கு காயம் - அமைச்சர் மா.சு

Jun 04, 2023 4:30 PM

ஒடிசா ரயில் விபத்திலிருந்து மீண்டு தமிழகம் வருவோருக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை என மொத்தம் 6 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிகிச்சை அளிக்க மொத்தம் 305 மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அவர்களில் 36 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு சென்ட்ரலில் உள்ளதாகவும் கூறினார். மேலும், சென்னை சென்ட்ரலுக்கு 137 பேர் வருகை தந்ததாகவும், அதில் 8 பேர் காயமுற்றிருந்ததாகவும் குறிப்பிட்டார்.