ஒடிசா ரயில் விபத்துக்கு எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் எனப்படும் மின்னணு இணைப்பு கோளாறே காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
280க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட ரயில் விபத்து நடைபெற்ற பாஹநஹாவில் இரண்டாம் நாளாக இன்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சடலங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக கூறினார். வரும் புதன்கிழமை காலைக்குள் தண்டவாள சீரமைப்பு பணிகளை முடித்து ரயில் போக்குவரத்தை பாலசோர் வழியே தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.