​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட்

Published : May 28, 2023 2:40 PM

நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட்

May 28, 2023 2:40 PM

தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிப்பதற்கான என்.வி.எஸ் - 01 செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட் மூலம் நாளை காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

அமெரிக்காவின் 'ஜி.பி.எஸ்.' போல், இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக 'நேவிக்' தொழில்நுட்பம் வடிவமைக்கப்படுகிறது. அதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ, 1பி, 1சி, 1ஜி உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் ஏற்கனவே ஏவப்பட்டன.

கடைசியாக 2018ஆம் ஆண்டில் 1ஐ செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 1ஜி செயற்கைக் கோளுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ்-01 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக் கோள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 10.42 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், ராக்கெட் ஏவுதலுக்கான இருபத்தி ஏழரை மணி நேர கவுண்ட்டவுன் காலை 7.12 மணிக்கு தொடங்கியது.