சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் இன்று சென்னை உயர்நீதிமன்ற 33ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.