தேனி மாவட்டம் கம்பத்தில் சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை, அங்கிருந்து சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்த நிலையில், அதை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
கம்பம் பகுதியில் நேற்று அந்த யானை சுற்றி திரிந்ததால், முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கிருந்து அருகிலுள்ள சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்துள்ள யானை, அங்கு தோட்டங்களுக்குள் புகுந்து பலா உள்ளிட்டவற்றை சேதப்படுத்திவிட்டு, திராட்சை தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ளது.
தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க பொள்ளாச்சியில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மேலும் ஒரு கும்கி யானை வரவழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அரிசி கொம்பனை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், யானை நடமாட்டம் உள்ள பகுதிக்கு மக்கள் செல்லாத வண்ணம் தடுக்க ஆங்காங்கே தடுப்பு அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.