தென் அமெரிக்க நாடான பெருவில் இருந்து ஐரோப்பாவின் பெல்ஜியத்திற்கு கடத்த முயன்ற 58 கிலோ போதை பொருளை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெருவின் பியூரா துறைமுகத்தில் இருந்து பெல்ஜியம் அனுப்பப்பட இருந்த பார்சல்களில் ஹிட்லர் என்ற வாசகத்துடன் நாஜி கொடி சின்னம் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, 50 பார்சல்களில் 58 கிலோ கொக்கைன் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என தெரிவித்த அதிகாரிகள், போதை பொருளை கடத்த முயன்ற கும்பலை தேடி வருகின்றனர்.