மத்தியப்பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து மனைவியின் கடைசி ஆசையான ராதா-கிருஷ்ணர் கோவிலை கட்டியுள்ளார்.
சத்தர்பூரைச் சேர்ந்த சன்சோரியா என்ற அந்நபரின் மனைவி 2016-ம் ஆண்டு நவம்பரில் உயிரிழந்தார். அவரது கடைசி ஆசையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என சன்சோரியா முடிவு செய்தார். இதற்காக தமது கையில் இருந்த சேமிப்பு பணம் ஒன்றரை கோடி ரூபாயை செலவிட்டு, கோவிலை கட்டி முடித்துள்ளார்.
இஸ்லாமிய கலைஞர்கள் கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளை செய்துள்ளனர். 6 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் தற்போது முடிவடைந்து, வரும் 29-ம் தேதி கோவில் திறக்கப்படவுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சன்சோரியா, ராதையும், கிருஷ்ணனும் காதலின் அடையாளம் என்பதால் இந்த கோயிலை கட்டியதாக கூறினார்.