மக்களே.. அடிச்சான் பாரு ஆப்பு.. கடைகளின் கல்லாவில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்..! பதுக்கிய நோட்டுகள் வெளியே வந்தன
Published : May 24, 2023 6:49 AM
மக்களே.. அடிச்சான் பாரு ஆப்பு.. கடைகளின் கல்லாவில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்..! பதுக்கிய நோட்டுகள் வெளியே வந்தன
May 24, 2023 6:49 AM
கடந்த 3 தினங்களாக சென்னையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு, அதிக அளவில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்துக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாற்ற இயலாது என்று வங்கிகள் கட்டுப்பாடு விதித்துள்ளதால் வியாபாரிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
2000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் வருகிற செப்டம்பர் மாதம் 30 ந்தேதியோடு புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படுவதாகவும், தினமும் 20 ஆயிரம் ரூபாய் அளவிற்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்த மூன்றே நாட்களில் பலரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் பப்ளிக் கைகளுக்கு அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளது.
குறிப்பாக பெட்ரோல் பங்குகளில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதற்கு கூட தற்போது சிலர் 2000 ரூபாய் நோட்டுக்களை நீட்டுவதாகவும், ஒரே நாளில் 300 நோட்டுக்கள் தங்கள் பெட்ரோல் நிலையத்துக்கு வந்ததாகவும், இதனால் சில்லறை கொடுக்க இயலாமல் தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
போரூர் பகுதியில் அண்ணாச்சி காய்கறி கடை நடத்திவரும் கார்த்திகேயன் கூறும் போது கடந்த 3 நாட்களாக 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சாமாணிய மக்களின் கண்ணில் படாத 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் தற்போது காய்கறி கடை, மளிகை கடை, சிக்கன் கடை, பாத்திரக்கடை என அனைத்து இடங்களிலும் தாராளமாக புழங்குவதாகவும், வங்கிகளில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாற்ற இயலாது என்பதால் தங்கள் கைகளுக்கு வரும் 2000 ரூபாய் நோட்டுக்களை எப்படி மாற்றுவது ? என்று சில வியாபாரிகள் விழிபிதுங்கி போயுள்ளதாகவும், சிலர் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதை ஏதோ கள்ள நோட்டை மாற்றுவது போல பார்ப்பதாகவும் தெரிவித்தனர்
அறிவித்த 3 நாட்களிலேயே இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்துள்ள நிலையில் நாட்கள் செல்ல செல்ல பெரிய அளவில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்துக்கு வரும் போது கடுமையான சில்லறை தட்டுப்பாடு ஏற்படும் என்கின்றனர் வியாபாரிகள். அதே நேரத்தில் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யும் 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.