திருப்பூர் மாவட்டம், விஜயாபுரம் அருகே உள்ள அரசு நியாய விலைக்கடையில் பொருட்கள் எடைக்குறைவாக வழங்கிய பெண் ஊழியர் பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கினார்.
பொன்முத்துப் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் பொதுமக்கள் பொருட்களை வாங்கும்போது எலக்ட்ரானிக் எடை மெஷினில் அளவை மாற்றி குளறுபடி செய்து ஒவ்வொரு கிலோ பொருளிலும் சுமார் கால் கிலோ அளவிற்கு குறைத்து வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், கடையில் துவரம் பருப்பு வாங்கிய ஒரு நபர், எடை குறைவாக இருந்ததை சுட்டிக் காட்டிய போது, திருதிருவென முழித்த பெண் ஊழியர், கூடுதலாக பருப்பை எடுத்து போட்டு எடையை சரிக் கட்டியுள்ளார்.
உடனே அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்களும் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதாக பெண் ஊழியர் கூறியதை அந்த நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.