அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார்.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் அவர் இப்பயணத்தை மேற்கொள்வதாக சென்னை விமான நிலையத்தில் புறப்படும் முன் முதலமைச்சர் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர்கள், திமுகவினர்கள் வழியனுப்பி வைத்தனர். வழக்கமாக அரைக்கை சட்டை மற்றும் வேட்டி அணியும் முதலமைச்சர், முழுக்கை சட்டை, பேண்ட் மற்றும் கருப்புக் கண்ணாடி அணிந்து பயணம் மேற்கொண்டார்.
கருப்பு வெயிஸ்ட் கோட் அணிந்து மனைவி மற்றும் அமைச்சர்களுடன் சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிறுவன அதிகாரிகளை அவர் சந்திக்க உள்ளார். சிங்கப்பூருக்குப் பின் முதலமைச்சர் ஜப்பான் செல்கிறார். முதலமைச்சர் இரு நாடுகளிலும் பயணம் மொத்தம் 9 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.