ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனேசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறைச் செயலர் வினய் குவாட்ரா, இரு நாடுகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து ஆஸ்திரேலிய அரசுடன் மோடி விவாதிப்பார் என்றும், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு புகலிடம் தரக்கூடாது என வலியுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியா வம்சாவளியினரையும் மோடி சந்தித்து பேசினார்.