​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருநங்கையுடன் தொடர்பு.. மணப்பெண்ணுக்கு வந்த மெசேஜ்.. திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு மணமகன் எடுத்த விபரீத முடிவு....

Published : May 22, 2023 6:07 PM

திருநங்கையுடன் தொடர்பு.. மணப்பெண்ணுக்கு வந்த மெசேஜ்.. திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு மணமகன் எடுத்த விபரீத முடிவு....

May 22, 2023 6:07 PM

சேலம் சங்ககிரி அருகே, திருமணத்திற்கு 4 நாட்களே இருந்த நிலையில், மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஐவேலி ஊராட்சியை சேர்ந்த விக்னேஷிக்கும், ஏத்தாப்பூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் வரும் 25ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் சங்ககிரியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் மின்பணி வேலைக்காக எலக்ட்ரீசியன் விக்னேஷ் சென்றபோது, வீட்டின் உரிமையாளரான அஸ்மா என்ற திருநங்கையுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விக்னேஷின் திருமண செய்தியறிந்த அஸ்மா, இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்தை, மணப்பெண்ணுக்கு அனுப்பி, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெண்ணின் பெற்றோர், மணமகனின் வீட்டிற்கு வந்து திருமணத்தை நிறுத்துவது குறித்து பேசி கொண்டிருந்தபோது, அஸ்மா, விக்னேஷின் வீட்டிற்கே வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. நடந்த சம்பவங்களை அறிந்து மனமுடைந்த விக்னேஷ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.