கள்ளக்குறிச்சி அருகே அடுத்தடுத்த இரண்டு கிராமங்களில் மர்ம நபர்கள் பெண்களை கத்தியை காட்டி மிரட்டி தங்கச் செயின் மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர்.
ஏரவார் கிராமத்தில் நள்ளிரவில் கழிவறை செல்வதற்காக ஜீவா என்ற பெண் வீட்டின் வெளியே வந்துள்ளார். இருட்டில் மறைந்திருந்த கொள்ளையர்கள் ஜீவாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சுதாரித்துக்கொண்ட ஜீவா செயினை விடாமல் பிடித்து கொண்டு போராடியுளார். இதனால் கத்தியை காட்டி மிரட்டி செயினை பறித்து சென்றுள்ளனர். சத்தம் கேட்டு அதே தெருவை சேர்ந்த பழனியம்மாள் என்ற மூதாட்டி ஜீவா வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
அந்த சமயத்தில் பழனியம்மாள் வீட்டிலிருந்த 50 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலூர் கிராமத்தில் அண்ணாதுரை என்பவருடைய வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது அந்த குடும்பத்தினர் சத்தம் போட்டு கையில் தடியை எடுத்த போது கொள்ளையர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.