பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலைமை தபால் நிலையத்தில் நேர்ந்த தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் 7 மணி நேரம் போரடி அனைத்தனர்.
97 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த தபால் நிலையம் அந்நாட்டின் தேசிய சின்னங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.
ஞாயிறு நள்ளிரவு அந்த கட்டடத்தின் தரை தளத்தில் பயங்கர தீ பற்றிக்கொண்டது. சுமார் 44 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்ததாக கூறப்படுகிறது.