ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கலப்பட பனங்கருப்பட்டி மலிவான விலையில் விற்கப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பனைத் தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனை மரம் ஏறம் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாள்தோறும் பனை மரத்தில் ஏறி இறங்கி பதநீர் இறக்கி 18 மணி நேரம் கடுமையாக உழைத்து பனங்கருப்பட்டியை தயார் செய்யவதாக கூறும் அவர்கள், ஒரு கிலோ பனங்கருப்பட்டியை 170 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக கூறுகின்றனர்.
இதற்கு மாறாக குறைந்த விலையில் விற்கப்படும் கலப்பட பனங்கருப்பட்டி விற்பனையை தடுத்து, தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசே நேரடி கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் பனங்கருப்பட்டி விற்கவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.