ஐரோப்பாவின் உயரமான எரிமலையாகக் கருதப்படும், இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை நெருப்பு குழம்புகளை சீற்றத்துடன் வெளியேற்றிக் கொண்டே இருப்பதால், பாதுகாப்பு காரணம் கருதி கட்டானியா நகரில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
3ஆயிரத்து 330 மீட்டர் உயரமுடைய எரிமலையிலிருந்து லாவா குழம்பு வழிந்தோடும் நிலையில்,எரிமலை வெடிப்பின்போது வெளிப்பட்ட கரும் சாம்பல் கட்டானியா விமான நிலைய ஓடுபாதை முழுவதும் சூழ்ந்துள்ளது.
மேலும், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், சாலைகளில் அடர் சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள் படர்ந்ததால், பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.