பேரிடர் காலத்தில் இந்தியா சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு தந்து தனது பொறுப்பை வெளிப்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற 76வது உலக சுகாதார சபையின் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரை நிகழ்த்திய பிரதமர், உலக சுகாதார அமைப்பின் 75 ஆண்டுகால சேவையை பாராட்டினார்.
கொரோனா பேரிடர் காலத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுமார் 30 கோடி தடுப்பூசி டோஸ்களை இந்தியா வழங்கியதாகத் தெரிவித்தார்.
இந்திய மரபான மருத்துவத்தில் நோயில்லாமல் இருப்பதும் ஆரோக்கியமாக இருப்பதும் வெவ்வேறு நிலைகள் என்பது கூறப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டிய மோடி, உலகம் நோயற்ற நிலையில் இருந்து ஆரோக்கிய நிலைக்கு நகர வேண்டும் என்று வலியுறுத்தினார்.