​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபான பாரில் மதுவாங்கி குடித்த 2 பேர் பலியான சம்பவம்: மதுவில் சயனைடு கலந்திருப்பதாக தகவல்!

Published : May 21, 2023 9:57 PM



மதுபான பாரில் மதுவாங்கி குடித்த 2 பேர் பலியான சம்பவம்: மதுவில் சயனைடு கலந்திருப்பதாக தகவல்!

May 21, 2023 9:57 PM

தஞ்சாவூரில், மதுபான பாரில் விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கிக் குடித்து உயிரிழந்த 2 பேரின் உடலில் கொடிய விஷமான சயனைடு கலந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கீழவாசலில் டாஸ்மாக் கடை அருகே செயல்பட்டு வந்த உரிமம் பெற்ற பாரில், விற்பனை நேரத்திற்கு முன்பாக கள்ளத்தனமாக விற்கப்பட்ட மதுவை அதேப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் குப்புசாமி, விவேக் ஆகியோர் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.

வாயில் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டு குப்புசாமி அதே இடத்தில் உயிரிழந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். உடற்கூராய்வின் முதற்கட்ட முடிவில் இறந்தவர்களின் உடலில் சயனைடு கலந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் கடை மற்றும் பாரில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் பார் மற்றும் கடைக்கு சீல் வைத்தனர்.