கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரரை பொதுமக்கள் கை, கால்களை கட்டி போலீஸில் ஒப்படைத்தனர்.
மாத்தார் பகுதியைச்சேர்ந்த ராணுவ வீரரான ரெதீஷ்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த நிலையில், ஆற்றூர் பகுதியில் டாஸ்மாக்கில் மதுகுடித்து விட்டு, சாலையில் நடந்து செல்வோரிடம் வம்பிழுத்ததோடு, பேருந்துகளையும் மறித்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பொதுமக்கள், அவரது கை, கால்களை இரும்புத் தூணோடு சேர்த்து கட்டி வைத்தனர். தகவலறிந்த திருவட்டார் போலீஸார், ராணுவ வீரரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.