திருவள்ளூர் மாவட்டத்தில், டூவீலரில் விற்பனைக்கு எடுத்துச் சென்ற எல்இடி டிவி மற்றும் ஹோம் தியேட்டரை வடமாநில வியாபாரிகளிடமிருந்து வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சதாம், லூசுமா ஆகியோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக பனப்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மாம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெனி ராஜ், அரக்கோணத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஆகியோர் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.
கொள்ளையடித்த பொருட்களை டூவீலரில் எடுத்துச் செல்லும் வீடியோ பதிவு வெளியான நிலையில், பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து பொருட்களை மீட்டனர்.