​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுவைக் குடித்த 2 பேர் பலி..!

Published : May 21, 2023 6:15 PM

பாரில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுவைக் குடித்த 2 பேர் பலி..!

May 21, 2023 6:15 PM

தஞ்சாவூரில், மதுபான பாரில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கிக் குடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

கீழவாசலில் டாஸ்மாக் கடை அருகே செயல்பட்டு வரும் உரிமம் பெற்ற பாரில், விற்பனை நேரத்திற்கு முன்பாக கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் குப்புசாமி, விவேக் ஆகியோர் மது வாங்கிக் குடித்ததாக தெரிகிறது. இதில், வாயில் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டு இருவரும் கீழே விழுந்ததில் குப்புசாமி அதே இடத்தில் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பாரிலிருந்த மது பெட்டிகளை சிலர் இடமாற்றம் செய்துக் கொண்டிருந்த நிலையில், அங்குச் சென்ற டாஸ்மாக் உதவி மேலாளரை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாரில் ஆய்வு மேற்கொண்டு, உயிரிழந்த 2 பேர் அருந்தியதாக கூறப்படும் மதுவின் மாதிரியை ஆய்வுக்குட்படுத்த உத்தரவிட்டார்.