​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
IIFA திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது..!

Published : May 21, 2023 7:24 AM

IIFA திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது..!

May 21, 2023 7:24 AM

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் கமல்.

நாயகன், மூன்றாம் பிறை, மகாநதி, இந்தியன், அவ்வை சண்முகி, விக்ரம் போன்ற ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட உயர்ந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த முறை அவருக்கு சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் விருது வழங்கப்படுகிறது. இதே போல் இவ்விழாவில் நடிகை ஜெனிலியா மற்றும் அவர் கணவருக்கும் பிராந்தியப் படங்களின்  சாதனையாளர்கள் விருது வழங்கப்படுகிறது.

இம்மாதம் 26, 27 ஆம் தேதிகளில் அபுதாபியில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது.