​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பறந்தாலும் விட மாட்டேன்.. பிறர் கையில் தர மாட்டேன்... போராடி கரம்பிடித்த இளம்பெண்..!

Published : May 20, 2023 2:25 PM



பறந்தாலும் விட மாட்டேன்.. பிறர் கையில் தர மாட்டேன்... போராடி கரம்பிடித்த இளம்பெண்..!

May 20, 2023 2:25 PM

காதலனுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி பெண் தனி ஆளாய் 9-நாட்கள் போராடி காதலனை கரம் பிடித்த  சம்பவம் குளச்சல் காவல் நிலையத்தில் அரங்கேறியது.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அருகே உள்ள அழிக்கால் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் லெனின் கிராஸ். துபாயில் வேலை பார்க்கும் இஞ்சினியரிங் பட்டதாரியான இவர் "விண்ணக திருப்பணிகள் குழு" என்ற வாட்ஸ் குரூப் வைத்துள்ளார்

இந்த குரூப்பில் கடந்த 3-வருடங்களுக்கு நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த 24-வயதான பிகாம் பட்டதாரி பெண்ணான ரிமோலின் விண்ணரசி என்பவர் இணைந்துள்ளார்

முதலில் லெனின் கிறாஸ் ம் , ரிமோலின் விண்ணரசியும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் பின்னர் பழக்கம் காதலாக மாறி இருவரும் வாட்ஸ் ஆப்பில் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

துபாயில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும் லெலின் கிறாஸ் ரிமோலின் விண்ணரசியை அழைத்து கொண்டு பைக்கில் ஊர் ஊராக சுற்றியதோடு, திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஓட்டலில் அறை எடுத்து தங்கி பொழுதை கழித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த லெலின் கிறாஸின் பெற்றோர் அவருக்கு கடந்த 11-ம் தேதி சைமன்காலணி பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்

தகவலறிந்து சைமன்காலணி பகுதிக்கு சென்ற ரிமோலின் விண்ணரசி , அங்குள்ள பங்கு தந்தையிடம் சென்று, தங்கள் இருவரின் உறவிற்கு சாட்சியான புகைப்பட ஆதாரங்களை அம்பலப் படுத்தியதால் திருமணம் நிறுத்தப்பட்டது.

லெலின் கிறாஸ் ன் பெற்றோர் , தனது மகனின் காதலியை ஏற்க மறுத்த நிலையில் தொடர் போராட்டத்தின் தொடர்ச்சியாக காதலன் தன்னை ஏமாற்றியது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத்திடம் 17-ம் தேதி விண்ணரசி புகாரளித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்

இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். காதலனின் பெற்றோர் தொடர்ந்து எதிர்பு தெரிவித்த நிலையில் புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

நிலைமையின் தீவிரம் உணர்ந்த காதலன் லெனின் கிறாஸ் பெற்றோரின் எதிர்பையும் மீறி காதலியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து இருவரும் குளச்சல் காவல் நிலையம் அருகே உள்ள அந்தோணியார் குருசடியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அவர்களிடம் போலீசார் 10-நாட்களில் பதிவு திருமணம் செய்து கொண்டு பதிவு ஆவணங்களுடன் காவல் நிலையத்தில் ஆஜராகும் படி எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்

9 நாட்கள் போராட்டத்துக்கு பின் காதலனை கரம் பிடித்த சந்தோசத்தில் ரிமோலின் விண்ணரசி காதலனுடன் சிரித்த முகத்தோடு புறப்பட்டுச் சென்றார்.