​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

Published : May 19, 2023 11:57 AM

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

May 19, 2023 11:57 AM

ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்றார்.

இந்த  பயணம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடேவின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும், உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை கூட்டாக எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இந்த பயணத்தின் போது உலகத் தலைவர்களுடன்  ஆலோசிக்கவுள்ளதாகவும் தெவித்துள்ளார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைக்க உள்ளார். ஜப்பானில் பயணத்தை முடித்துக்கொண்டு பபுவா நியு கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளார்.