​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

Published : May 18, 2023 6:26 AM

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

May 18, 2023 6:26 AM

கேரள மாநிலம் கொல்லத்தில் மருந்து சேமிப்பு கிடங்கில் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாயின.

உளிய கோவில் பகுதியில் மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மருந்து சேமிப்பு கிடங்கில் மருந்துகள்  மட்டும் இன்றி மருந்து தயார் செய்ய பயன்படுத்தப்படும் கெமிக்கல் வகைகளும் பாதுகாத்து வைக்கப்படுவது வழக்கமாகும்.

இந்த கிடங்கில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிய துவங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.