​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பாக அமெரிக்காவின் அறிக்கையை நிராகரித்தது இந்தியா..!

Published : May 17, 2023 6:09 AM

சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பாக அமெரிக்காவின் அறிக்கையை நிராகரித்தது இந்தியா..!

May 17, 2023 6:09 AM

சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பாக அமெரிக்காவின் அறிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, அமெரிக்காவின் அறிக்கை, தவறான தகவல் மற்றும் தவறான புரிதலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் இந்த அறிக்கை, சில அமெரிக்க அதிகாரிகளின் உந்துதல் அடிப்படையில் வெளியிடப்பட்டிருப்பதாக அரிந்தம் பக்சி தெரிவித்தார்.