​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரில் இருந்து நீண்டது ஸ்விக்கி ஊழியரின் கை... காட்டிக் கொடுத்த ஸ்டிக்கர்ஸ்... கால் டாக்ஸி பறிமுதல்..!

Published : May 16, 2023 4:25 PM



காரில் இருந்து நீண்டது ஸ்விக்கி ஊழியரின் கை... காட்டிக் கொடுத்த ஸ்டிக்கர்ஸ்... கால் டாக்ஸி பறிமுதல்..!

May 16, 2023 4:25 PM

கோவையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம்  காரில் வந்து நகைப்பறிக்க முயன்ற ஸ்விக்கி ஊழியரையும் ,கார் ஓட்டுனரையும் கைது செய்த போலீசார் கால் டாக்ஸியை பறிமுதல் செய்தனர். கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் சாமர்த்தியமாக மடக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

கோவை பீளமேடு ஹட்கோ காலணி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கவுசல்யா என்ற பெண்ணிடம் காரில் வந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

நம்பர் இல்லாத காரின் பக்கவாட்டில் ஒட்டப்பட்டிருந்த மஞ்சள் வண்ண ஸ்டிக்கரை அடையாளமாக வைத்து காரை தேடி வந்தனர்.

அந்த கார், கொள்ளை முயற்சிக்கு முன்பாக எங்கிருந்து வந்தது என்பதை ஒவ்வொரு சிசிடிவி காட்சிகளாக சேகரித்து ஆய்வு செய்தனர்.

இதில் அந்த வெள்ளை நிற மாருதி சுசுகி சுவிப்ட் டிசயர் கார் சென்னை விமான நிலைய பகுதிகளில் கால் டாக்ஸியாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தர்மபுரியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர் சக்திவேலை தூக்கிய போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவருடன் காரில் சென்று தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஸ்விக்கி ஊழியரான திருவண்ணாமலையை சேர்ந்த அபிசேக் என்பவரையும் மடக்கிப்பிடித்தனர்.

கடந்த 7 வருடங்களாக நட்பில் உள்ள இவர்கள் இருவரும் சேர்ந்து போலீசில் மாட்டிக் கொள்ளாமல் தங்க சங்கிலி பறிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி சம்பவத்தன்று காரின் இருபக்கம் உள்ள நம்பர் பிளேட்டுகளையும் கழட்டிவிட்டு, செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அவர்களது காரில் ஒட்டியிருந்த சில ஸ்டிக்கர்கள் அவர்களை அடையாளம் காட்டிவிட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல், அபிசேக் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிசிடிவி காட்சி இல்லையென்றால் இந்த வழக்கில் துப்பு துலக்கி இருக்க முடியாது என்று குறிப்பிட்ட போலீசார் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே சிசிடிவி பொறுத்துவது கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், கொள்ளையர்களை அடையாளம் காணவும் உதவும் என்று சுட்டிக்காட்டினர்.