மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி சாலை போக்குவரத்தை கண்காணித்து விபத்துகளை தவிர்க்கும் புதிய திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசாணையில், மின்னணு கருவியை பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி வாகன எண் அறியும் தொழில்நுட்பம், வாகனங்களில் உள்ள எடையை அறியும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு விதிமீறல்களை கண்காணித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே 15 நாட்களுக்குள் அபராதம் விதிக்கப்படும் என்றும், இணையதளத்திலோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ அபராதத் தொகையை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.