தமிழகத்தில் டெங்கு, மலேரியா பாதிப்புகள் கடந்த ஆண்டை விட இந்தாண்டு மேலும் குறைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு தேனாம்பேட்டை டிஎம்ஸ் வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கொசு ஒழிப்பு பணிக்கான ஒத்திகையை அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர், கடந்த இரு ஆண்டுகளாக டெங்குவால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறினார்.
டெங்கு, மலேரியா போன்றவற்றை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த போதிய ரசாயனப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.