மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு கொள்கையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை டெல்லியில் இருந்து காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சர்வதேச நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருவதால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெருகி வருவதாக கூறினார்.
வால்மார்ட், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவன சி.இ.ஓ.க்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்க தம்மிடம் உறுதியளித்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இன்று பணி நியமன ஆணை பெற்றவர்கள், மத்திய மாநில அரசுகளில் உதவி அமலாக்க அதிகாரி, ஆய்வாளர், உதவி பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.