​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெக்சிகோவில் பயணிகள் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 26 பேர் உயிரிழப்பு

Published : May 15, 2023 6:14 PM

மெக்சிகோவில் பயணிகள் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 26 பேர் உயிரிழப்பு

May 15, 2023 6:14 PM

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் பயணிகள் வேனும் டிரக் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.

ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள குவாடலஜாராவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நயாரிட்டில் உள்ள கடலோர ரிசார்ட் பகுதிக்கு வேன் சென்றுக் கொண்டிருந்தது.

தமவுலிபாஸ் பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில், வேன் தீ பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து செல்வோர் மெக்சிகோவில் அடிக்கடி விபத்தில் சிக்கி வரும் நிலையில், தற்போதைய விபத்தில் சிக்கிய அனைவரும் மெக்சிகோ நாட்டவர்கள் என்றும் அவர்கள் சுற்றுலா சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.