ஆஸ்திரேலியாவின் ராயல் தேசிய பூங்காவில் 50 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன பிளாட்டிபஸை மீண்டும் இனப்பெருக்கம் செய்யவைக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது.
பாலூட்டிகளில் முட்டையிடக்கூடிய விலங்கினமான பிளாட்டிபஸ், நீர், நிலம் என இரண்டிலும் வாழக்கூடியது. ஆற்றுபடுகையில் உள்ள புழுக்களை உண்டு வாழும் பிளாட்டிபஸ், ஆறுகளில் மாசு கலப்பதாலும், வாழ்விடங்கள் அழிக்கப்படுவதாலும் வேகமாக அழிந்துவருகிறது.
ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் இந்த அரியவகை விலங்கின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சிட்னி அருகேயுள்ள தேசிய பூங்காவில் புதிதாக 4 பிளாட்டிபஸ்கள் விடப்பட்டன.