ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் திடீரெனப் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் மத்திய சோமாலியாவில் பெய்த மழை காரணமாக 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஹிரான் என்ற இடத்தில் கனமழை பெய்ததால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டடங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.