கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை 135 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் ஒப்படைத்து ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
புதிதாகத் தேர்வான எம்.எல்ஏக்களுடன் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இரு தரப்பு ஆதரவாளர்களும் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்ற நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே நின்று கோஷமிட்டனர். இரு தரப்பினரிடையே சுவரொட்டி யுத்தமும் நடைபெற்றது.
எம்.எல்.ஏக்களின் முடிவை கட்சி மேலிடத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் இன்றே முதலமைச்சர் யார் என்று அறிவிக்கப்படுவார் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.