​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனந்த்நாக்கில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை..!

Published : May 14, 2023 12:25 PM

அனந்த்நாக்கில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை..!

May 14, 2023 12:25 PM

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அந்த்வன் சகம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

அந்த்வன் சகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்பு படையினருடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் போலீசார் இன்று காலை தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.