ஆந்திராவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஆந்திரப் பிரதேச பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
கடும் வெப்ப அலை எழலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சனிக்கிழமை நாந்தியாலா மாவட்டத்தில் உள்ள கோஸ்படு பகுதியில் அதிகபட்ச வெப்பமாக 42 புள்ளி 2 டிகிரி செல்சியஸ் பதிவானது.
கோடை வெப்பத்தின் பாதிப்புகளை சமாளிக்க அதிகாரிகளுக்கு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.கடும் கோடைக்கு நடுவே சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது.
எனவே கால்நடை மேய்ப்பவர்கள் மரத்தின் அடியில் ஒதுங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்