சேலம் கடை வீதியில் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி சாலையில் இருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய நபரிடம் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் ரெட்டிபட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நமச்சிவாயம் என்பவர் குடும்பத்துடன் சேலம் சின்ன கடைவீதி பகுதியில் பொருட்கள் மற்றும் துணி வாங்குவதற்காக சென்றுள்ளார்.
பின்னர் அவர்களை இறக்கி விட்டு நமச்சிவாயம் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது சாலையில் வாகன ஓட்டிகள் மீது மோதிய அவர், சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியதால் வாகனங்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்து சென்ற போலீசார் விரைந்து வந்து குடிபோதையில் காரில் இருந்து இறங்க மறுத்த நமசிவாயத்தை வலுக்கட்டாயமாக காவல்நிலையத்திற்கு இழுத்து சென்றனர்.