​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி யாருக்கு? கட்சித் தலைமை மற்றும் புதிய எம்.எல்.ஏக்கள் மூலம் இன்று தேர்வு..!

Published : May 14, 2023 6:15 AM

கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி யாருக்கு? கட்சித் தலைமை மற்றும் புதிய எம்.எல்.ஏக்கள் மூலம் இன்று தேர்வு..!

May 14, 2023 6:15 AM

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போதும் அதன் உட்கட்சிப் பூசல் ஓயவில்லை.

முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி நீடிக்கிறது. முதலமைச்சர் பதவியைப் பெற முயற்சிக்கும் மூத்த தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோரை சமாதானப்படுத்த கட்சியின் மேலிடம் முயன்று வருகிறது.

சித்தராமையா முதலமைச்சராகக்கூடாது என்பதற்காக டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேயின் பெயரைப் பரிந்துரை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்று மாலையில் நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மற்றும் கட்சித் தலைமையின் முடிவை ஏற்பதாகவும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.